அரசின் பசுமை வீட்டில் இயங்கிய டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா

அரசின் பசுமை வீட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-19 10:05 GMT
கூனப்பட்டியில், அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையால், பெண்கள், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். அப்போது, அனைவரையும் உள்ளே அனுமதிக்க போலீஸ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த மக்கள், திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர், உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக நடவடிக்கையை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து, தர்ணா போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்