சேலம் : வங்கிகளில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு?

10 ரூபாய் நாணயங்களுடன் பொதுமக்கள் அவதி

Update: 2019-01-08 11:02 GMT
சேலம் மாவட்டம் ஓமலூரில் பத்து ரூபாய் நாணயங்களை வங்கிகள், ரேஷன் கடைகள், பேருந்துகள் என பல்வேறு இடங்களில்,  வாங்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து வங்கி மேலாளர் ஒருவரிடம் கேட்டபோது வங்கி தலைமை குறைந்த அளவிலான நாணயங்களை மட்டுமே வாங்க உத்தரவிட்டுள்ளதாகவும், நாணயங்களை எண்ணி வைப்பதற்கு போதுமான இடம் இல்லை எனவும் விளக்கம் அளித்தார். வங்கிகளில் குறைந்த அளவே வாங்குவதால் கடைகளிலும், பேருந்துகளிலும், பத்து ரூபாய் நாணயங்கள் நிராகரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்