பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உருவ பொம்மை எரிப்பு
திருமாவளவன் குறித்து விமர்சனம் செய்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் உருவப்பொம்மையை சிதம்பரத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை தேசிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.