காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-06 00:59 GMT
  • மக்களவை தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நிறைவு... 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு...
  • அரச குடும்பத்தின் வாரிசுகளே முதல்வராகவும், பிரதமராகவும் வரலாம் என்ற வழக்கத்தை, டீ வியாபாரியாகிய நான் முறியடித்தேன்... உத்தரப்பிரதேசம் மாநிலம் இதாவா பகுதியின் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பெருமிதம்...
  • ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்... காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேட்டி...
  • பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு.... தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு....
  • தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்... கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு...
  • நீட் தேர்வில் இயற்பியல் கேள்விகள் கடினமாகவும், வேதியியல், உயிரியல் பாடங்கள் எளிதாகவும் இருந்தன.... நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பேட்டி...
  • ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிப்பு... இணையதளம் மூலம் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடக்கம்... 
  • வார விடுமுறை முடிந்து வாகனங்களில் சென்னை திரும்பிய தென் மாவட்ட மக்கள்... சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்... 
  • தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....
  • ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள்... முதல் போட்டியில் பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சி.எஸ்.கே. அபாரம்... இரவு நடைபெற்ற போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை சுருட்டி முதல் இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா அணி... 
  • ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன... மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது... 
Tags:    

மேலும் செய்திகள்