ரூ.636.05 கோடி மதிப்பிலான கட்டடங்கள் : காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

பள்ளிக்கல்வி, நெடுஞ்சாலை உள்பட ஐந்து துறை சார்பில் 636 கோடியே 5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2018-12-12 10:32 GMT
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 142 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் முதலமைச்சர் திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத்துறை சார்பில், 484 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 3 மேம்படுத்தப்பட்ட சாலைகள், 2 ஆற்றுப்பாலங்கள், ஒரு சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 

வேளாண்துறை சார்பில் 4 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்குகள்,விரிவாக்க மையக் கட்டடங்களும், மீன் மற்றும் பால்வளத்துறை சார்பில் 4 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் நோய் அறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகம், பால்வளத்துறை துணை பதிவாளர் அலுவலகம், அதி நவீன ஆவின் பாலகம் ஆகிய கட்டடங்களை முதலமைச்சர் கணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  
தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வில் துறை சார்ந்த அமைச்சர்கள், செயலாளர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்