11 தமிழர்கள் கடத்தல் வழக்கில் இலங்கை முப்படை தளபதிக்கு ஜாமின்

கடத்தல் வழக்கில் இலங்கை முப்படை தளபதிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-06 07:29 GMT
கடத்தல் வழக்கில் இலங்கை முப்படை தளபதிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் ராஜபக்சே அதிபராக இருந்தபோது, கொழும்பில், 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர், காணாமல் போயினர். இது தொடர்பான வழக்கில், கடற்படை முன்னாள் செய்தி தொடர்பாளர் தசநாயக உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, இதில் தொடர்புடைய கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன பிரசாத் என்பவர் வெளிநாடு தப்பிச் சென்றார். அவருக்கு உதவியதாக, இலங்கை முப்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன, கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி இலங்கை கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவியை கொண்டு சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்