ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை - சசிகலாவிடம் சிறையில் விசாரிக்க திட்டம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-11-17 14:15 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து அடுத்தகட்டமாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர், லண்டன் மருத்துவர்  ரிச்சர்டு பீலே, சசிகலா, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம்  விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த விசாரணை அனைத்தையும் வரும் டிசம்பர் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவிடம், இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி முன்னிலையில், காணொலி காட்சி  மூலம் விசாரணை நடத்துவதற்கான அனுமதியை பெறும் நடவடிக்கைகளை ஆணையம் தொடங்கி உள்ளது. 
இதேபோல், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த  பெங்களூர் சிறைத்துறையிடம் அனுமதி பெறும் பணிகளிலும் ஆணையம் இறங்கியுள்ளது. இந்த பணி முடிந்ததும், நீதிபதி ஆறுமுகசாமி விரைவில் பெங்களூர் செல்ல உள்ளார். இதன்மூலம், தனது இறுதி அறிக்கையை, அரசு அளித்துள்ள கால அவகாசமாக பிப்ரவரி 24-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்