"ரெட் அலர்ட் - தயார் நிலையில் தமிழக அரசு"

அதீத கனமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

Update: 2018-10-05 05:50 GMT
* கேரளாவை தொடர்ந்து தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் அதிதீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு  மையம் எச்சரித்துள்ளது. 

* இந்தநிலையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

* அதிதீவிர கனமழையால் ஏற்படும் நிலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் தாழ்வான பகுதிகளாக 4 ஆயிரத்து 399 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

* மேலும், அணைகளுக்கு வரும் நீரின் அளவு, இருப்பு மற்றும் நீர் திறப்பு குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்