"சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்" - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்
பதிவு: செப்டம்பர் 10, 2018, 06:07 AM
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். 

இதில், அரசியல் சாசனப்பிரிவு 161-ன் கீழ், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்ய  ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த தகவலை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார்.