ஸ்ரீ ரங்கம் கோவில் சிலை திருட்டு புகார் விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீ ரங்கம் கோவிலில் சிலைகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது

Update: 2018-08-09 14:29 GMT
ஸ்ரீ ரங்கம் கோவிலில் சிலைகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீ ரங்கம் கோவிலில், சிலைகள் எதுவும் திருடப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டனர். இந்த தகவலை, வழக்கு தொடர்ந்த ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் நரசிம்மன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்