ஜூனியர் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்...

இளைஞர்களுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிஸ் நகரில் இன்று தொடங்குகிறது.

Update: 2018-10-06 07:33 GMT
இளைஞர்களுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிஸ் நகரில் இன்று தொடங்குகிறது. 14 வயது முதல் 18 வயது உடைய வீரர், வீராங்கனைகள் யூத் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி உடையவர்கள் ஆவர். வரும் 18ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 997 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பாக 47 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்திய வீராங்கனை மனு பாக்கர் மூவர்ண கொடியை தொடக்க விழாவில் ஏந்தி செல்கிறார். துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம் ஆகிய போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்