காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-29 00:57 GMT
  • சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழு​ந்ததில் 3 ஊழியர்கள் உயிரிழப்பு... விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை...
  • சென்னையில் விபத்து நடந்த மதுபான கூடத்திற்கு சீல்... சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு...
  • சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மதுபான விடுதி விபத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமல்ல... மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்...
  • தமிழக தேர்தல் களத்தில் ஆயிரத்து 85 வேட்பாளர்கள் போட்டி... பரிசீலனையில் 664 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு...
  • விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 14 பேர் போட்டி...22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், 8 பேரின் மனுக்கள் நிராகரிப்பு...
  • கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு தாக்கலில் குளறுபடி என புகார்... பணியில் இருந்த ஊழியர் தவறாக பதிவேற்றியதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம்...
  • நேரடியாக களத்தில் எதிர்க்க முடியாத அரசியல் கட்சிகள், வேட்பு மனு குளறுபடி என்னும் நாடகத்தை கையில் எடுத்துள்ளார்கள்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்.....
  • 100 நாள் வேலைவாய்ப்பு பணியாளர்களுக்கு தினக்கூலி உயர்வு... இந்தியா கூட்டணி அரசு அமைந்த பிறகு 400 ரூபாயாக உயர்த்தப்படும் என ராகுல்காந்தி உறுதி...
  • நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள "கா - தி ஃபாரஸ்ட்" திரைப்படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை... இன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடி உத்தரவு...
  • நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்... ஏப்ரல் 22ம் தேதி படத் தலைப்பு வெளியாகும் என்றும் தகவல்...
  • ஐபிஎல் தொடரில் 9வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி... 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அசத்தல்...
Tags:    

மேலும் செய்திகள்