மரபு வழி சொத்து வரி விவகாரம் - பிரதமர் மோடி வைத்த குற்றச்சாட்டு..காங்கிரஸ் கொடுத்த முக்கிய விளக்கம்

Update: 2024-04-25 11:54 GMT

இந்திரா காந்தியின் சொத்துக்களை பெறுவதற்காகவே மரபு வழி சொத்துக்கள் மீதான வரியை ராஜீவ் காந்தி நீக்கியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியில் பாஜகவின் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டை விட எதுவும் பெரிதல்ல என்பதே பாஜகவின் சிந்தனை என்றார். மாறாக குடும்பம் தான் எல்லாமே என்பது தான் காங்கிரசின் சிந்தனை என்று குற்றம் சாட்டினார். நாட்டில் உள்ள மரபு வழி சொத்துக்களின் மீது மரபு வரியை விதிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மரணம் அடைந்தபோது, அப்போது நடைமுறையில் இருந்த சட்டத்தின்படி பிள்ளைகளுக்கு சொத்தை வழங்குவதற்கு முன்பாக, அதில் ஒரு பகுதி அரசால் எடுத்துக் கொள்ளப்படும் என்றார். அவ்வாறு அரசின் கைகளுக்கு இந்திரா காந்தியின் சொத்துக்கள் செல்வதை தடுப்பதற்காக அப்போது நடைமுறையில் இருந்த மரபு சொத்து வரியை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நீக்கியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்