"வடமாநிலங்களில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் முதல்வர் ஸ்டாலின்?" - செல்வப்பெருந்தகை

Update: 2024-04-25 09:53 GMT

டெல்லி உள்ளிட்ட வடமாநிலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 10 காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட தாரகை ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, முதலமைச்சரை காங்கிரஸ் வேட்பாளர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவித்தார். மேலும், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்