திருவொற்றியூரில் ராயபுரம் மனோ தீவிர வாக்கு வேட்டை | ADMK

Update: 2024-04-17 12:16 GMT

திருவொற்றியூரில் ராயபுரம் மனோ தீவிர வாக்கு வேட்டை | ADMK

#ADMK #electioncampaign #ThanthiTv

வடசென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்... திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழாங்குப்பம், சிவன் படை குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த ராயபுரம் மனோவுக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் சால்வை அணிவித்தும் மலர்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்... சிவன் படை வீதி குப்பத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்... தொடர்ந்து ராயபுரம் மனோ அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் தான் வெற்றி பெற்றால் நிச்சயம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன் என ராயபுரம் மனோ வாக்குறுதி அளித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்