"தென்மாநிலங்கள்..." - உறுதியாக சொன்ன அமித்ஷா | amitshah

Update: 2024-04-30 08:53 GMT

தென் மாநிலங்களில் உள்ள வாக்காளர்களிடமிருந்து பாஜகவிற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது என்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் இரண்டு கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தென்னிந்தியாவில் பாஜகவிற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக குறிப்பிட்டார். வாக்காளர்களை சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று பாஜக பார்ப்பதில்லை என குறிப்பிட்ட அமித்ஷா, மதத்தின் அடிப்படையிலான இட ஒதுக்கெட்டில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார். நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு பாஜக ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார்.

விரக்தியின் காரணமாக காங்கிரஸ் கட்சி தன்னை குறித்தும், இதர பாஜக தலைவர்கள் குறித்தும் போலியான வீடியோக்களை பரப்பி வருவதாக குற்றம் சாட்டிய அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் மாநில முதல்வர்கள் மாநிலத் தலைவர்கள் அந்த போலியான வீடியோக்களை பரப்பி வருவதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்