கடலுக்கடியில் அ.தி.மு.க மாநாட்டின் விளம்பர பேனர்

Update: 2023-08-18 01:47 GMT

மதுரையில் வரும் 20 ந்தேதி நடைபெறும் அதிமுகவின் எழுச்சி மாநாட்டு விளம்பரத்தை கடலூரில் கடலுக்கு அடியில் பிடித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகம் அருகே அதிமுக ஐடி விங் சார்பில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத்திற்கு ஆதரவாக அதிமுகவினர் ஸ்கூபா பயிற்சி பெற்றவர்களுடன் கடலுக்கு அடியில் சென்று பேனரை பிடித்துள்ளனர். அப்போது ஆயிரக்கணக்கான மீன்கள் பேனர் மீது சென்ற காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்