"தொழில் நிறுவனங்களை மிரட்டி கோடிகளில் வசூல்வேட்டை..?".. மாஜி பாஜக நிர்வாகிக்கு வந்த கடிதம்

Update: 2024-05-25 12:48 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவி செல்வராணியின் கணவர் மகுடீஸ்வரன். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்த அவர், கடந்த மாதம் காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைதானார். இதையடுத்து மகுடீஸ்வரன் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் மகுடீஸ்வரன் ரேக்ளா பந்தயம் நடத்துவதாக கூறி தொழில் நிறுவனங்களை மிரட்டி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மகுடீஸ்வரனிடம் விளக்கம் கேட்டு திண்டுக்கல் மாவட்ட பாஜக பொருளாளர் ஆனந்த் கடிதம் அனுப்பி உள்ளார். இதற்கு பதில் கடிதம் எழதி உள்ள மகுடீஸ்வரன் காழ்புணர்ச்சி காரணமாக அனுப்பபட்ட இந்த கடித்ததை திரும்ப பெறா விட்டால் மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என பதில் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த இரண்டு கடிதங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்