இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-25 16:04 GMT

போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் காவல்துறை இடையே நீடித்து வந்த பிரச்சினை, துறை செயலாளர்களின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இன்று முடிவுக்கு வந்துள்ளது. மோதலுக்கு காரணமான காவலரும், நடத்துனரும் சமாதானமான வீடியோ வெளியாகியுள்ளது. தகவல்களை விவரிக்கிறார் செய்தியாளர் பாஸ்கரன்...

6ஆம் கட்ட மக்களவை தேர்தல், இன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. டெல்லியில் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் ஜனநாயக கடமையாற்றினர். அண்மை தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் ரமேஷ்குமார்...

ரமேஷ்குமார், 6ஆம் கட்ட தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு எதுவும் வெளியிட்டிருக்கிறதா? விவரங்கள சொல்லுங்க..

சேலம் ஓமலூர் அருகே குழந்தையை கடத்த வந்த‌தாக கூறி, மூதாட்டியை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில், பின்னர் வெளியான உண்மை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு....

ஆரணி அருகே, 2 ஹெலிகாப்டர்கள் இன்று திடீரென தரை இறங்கியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

மனிதர்களிடையே தீவிர பாதிப்பை உண்டாக்கும் வீரியம் கொண்ட புதிய வகை வைரஸ்-ஐ உருவாக்கி சீன ஆராய்ச்சியாளர்கள் உலகை அதிரவைத்துள்ளனர். சீனாவின் இத்தகைய ஆய்வுகள் அவசியமானதா? துறைசார் வல்லுனருடன் சிறப்புசெய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடலைப் பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்