"இஸ்லாமியர்களுக்கு ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு.." - மோடி கடும் விமர்சனம்

Update: 2024-05-25 15:21 GMT

பீகார் மாநிலம் பாடலிபுத்திரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் உள்ள 77 இஸ்லாமிய பிரிவுகளுக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் ஓபிசி அந்தஸ்து வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும் இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் ஓபிசி சமூகத்தினருக்கு சேர வேண்டிய அரசுப்பணி சலுகைகள் இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தனது வாக்கு வங்கியை மகிழ்ச்சியாக்க, காங்கிரஸ் சிறுபான்மையினர் தொடர்பான சட்டங்களை இரவோடு இரவாக மாற்றியதாகவும் கூறினார். இந்த சட்டத்திற்கு பின்னரே ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், சிறுபான்மை நிறுவனங்களாக மாற்றப்பட்டதாகவும் இதற்கு முன், பட்டியலின சமூகத்தினர் மற்றும் ஓபிசி பிரிவினர் இந்த நிறுவனங்களில் முழு இட ஒதுக்கீடுகளை பெற்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்