புதுவையில் அமைச்சரவை விரைவில் பதவியேற்பு - பாஜக சட்டமன்ற குழு தலைவர் நமச்சிவாயம்

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி அரசு, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தும் என்றும், அமைச்சர்கள் விரைவில் பதவி ஏற்பார்கள் என்றும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2021-05-31 02:18 GMT
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி அரசு, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தும் என்றும், அமைச்சர்கள் விரைவில் பதவி ஏற்பார்கள் என்றும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நமச்சிவாயம் கூறினார். காமராஜர் நகர் தொகுதியில் ஏழைகளுக்கு பாஜக சார்பில் 25 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டது. இதை பாஜக சட்டமன்ற குழு தலைவர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நமச்சிவாயம், கொரோனா நிவாரணம், முதியோர் உதவித்தொகையை உயர்த்தி அறிவிப்பு, சென்டாக் தொகை, மீன்பிடி தடைக்கால நிவாரணம், அரிசி பணம் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார். விரைவில், அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்