"50% மத்திய அரசு வழங்க வேண்டும்" - மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஆகும் செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு தரவேண்டும் என்று மக்களவையில் ஓ.பி. ரவீந்திர நாத் எம்பி வலியுறுத்தினார்.

Update: 2020-09-20 16:28 GMT
மக்களவையில் பேசிய அதிமுக எம்பி ரவீந்திரநாத், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவ கட்டமைப்புக்காக தமிழகம் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 2 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், மத்திய அரசிடம் நிதி கேட்டு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கடிதம் எழுதியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் நாள்தோறும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா சோதனை நடத்தப்படுவதாகவும், இதற்காக 4 கோடி ரூபாய் செலவாவதாகவும், அதில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை தந்ததற்கும், ஒரே ஆண்டில் 10 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியளித்ததற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா பரவல் குறித்த திமுக எம்பி தயாநிதிமாறன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ரவீந்திரநாத், இந்தியாவில் ஒரு மதம் சார்ந்து யாரும் செயல்படவில்லை என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்