கருணாநிதி, ஜெயலலிதா பெயரை சட்டசபையில் குறிப்பிடலாமா? : அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்டாலின் காரசார விவாதம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அடிக்கடி சொல்வதாகவும், அதனை சபாநாயகர் நிறுத்த வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லுார் ராஜூ வலியுறுத்தினார்.

Update: 2019-07-09 09:49 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அடிக்கடி சொல்வதாகவும், அதனை சபாநாயகர் நிறுத்த வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லுார் ராஜூ வலியுறுத்தினார்.  அதற்கு பதில் அளித்து பேசிய ஸ்டாலின், தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டுமே ஜெயலலிதா பெயரை குறிப்பிடுவதாகவும் அது தவறு ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுவதாக தெரிவித்த ஸ்டாலின், இதனை ஒரு குற்றச்சாட்டாக கூறுவது சரியல்ல எனவும் தெரிவித்தார். அப்போது பேசிய சபாநாயகர் தனபால்,  மறைந்த தலைவர்கள் பெயரை குறிப்பிடுவது சரியாக இருக்காது எனவும், யாருடைய பெயரையுமே குறிப்பிட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்