மக்களவைக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு : பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஓம் பிர்லா போட்டி

மக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

Update: 2019-06-18 09:40 GMT
மக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோட்டா தொகுதி பாஜக எம்.பி. ஓம் பிர்லா மக்களவை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுகிறார்.  ராஜஸ்தானை சேர்ந்த அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். ஓம் பிர்லாவை எதிர்த்து யாரும் போட்டியிடாத்தால், அவர் போட்டியின்றி மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்