எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது - பிரதமர் நரேந்திர மோடி

ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் தொடர்பான கருத்தை பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்ட மறுத்துள்ளார்.

Update: 2019-05-15 05:47 GMT
எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும், ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகமே ஒரு குடும்பம் என்பது தான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த சர்ச்சை பேச்சு குறித்து கமலிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கமலின் அளவுக்கு அறிவு இல்லாவிட்டாலும் இந்து கலாச்சாரம் பற்றி தமக்கு தெரியும் என்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்