வருமான வரி சோதனை : பிரதமர் மோடி விளக்கம்

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை என்று பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-04-20 09:04 GMT
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை என்று பிரதமர் நரேந்திரமோடி  விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தலின்போது, நாடு முழுவதும் பல இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து, எதிர்க்கட்சிகள் வெளியிட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பேட்டி ஒன்றில் பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். இந்த சோதனைகள் அனைத்தும் சட்டப்படி நடந்ததாக அவர் விளக்கம் அளித்தார். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்