"எனது குடும்பம், பாஜக குடும்பம்" எனும் பிரசார பேரணி : அமித்ஷா துவக்கி வைத்தார்
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை ஒட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பாஜக சார்பாக "எனது குடும்பம், பாஜக குடும்பம்" எனும் பிரசார பேரணி துவக்க விழா நடைபெற்றது.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வீட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சி கொடியை அசைத்து பேரணியை அவர் துவக்கி வைத்தார்.