எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : ஒரே நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது எப்படி? - தினகரன் கேள்வி

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலையில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சபாநாயகர்கள் எடுத்த முடிவுகளில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது எப்படி

Update: 2018-06-14 09:38 GMT
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : ஒரே நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது எப்படி? - தினகரன் கேள்வி

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலையில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சபாநாயகர்கள் எடுத்த முடிவுகளில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது எப்படி என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் தினகரன்
கேள்வி எழுப்பி உள்ளார். இரண்டு நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியிருந்தால் உச்சநீதிமன்றத்தை நாடியிருப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு உள்ளோம், எந்த தீர்ப்பு வந்தாலும் 18 பேரும் என்னுடன் தான் இருப்பார்கள் என தினகரன் கூறியுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்