மூக்கில் விரலை வைத்த உலக நாடுகள்..அண்ணாந்து பார்க்க வைத்த அம்பானி..ஜியோ செய்த கெத்தான சம்பவம்

Update: 2024-04-25 12:34 GMT

2016இல் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தற்போது 48.18 கோடி சந்தாதாரர்களுடன், இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக உள்ளது.

ஜியோ மூலம் நடைபெறும் டேட்டா போக்குவரத்தின் அளவு தற்போது 40.9 எக்சா பைட்டாக, கடந்த மார்ச் அளவை விட 35.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு எக்சா பைட் என்பது 100 கோடி ஜிகா பைட்டிற்கு சமம்.

இதன் மூலம், டேட்டா போக்குவரத்தின் அடிப்படையில் உலக அளவில் முதலிடத்தில் இருந்த சைனா மொபைலை, ஜியோ முந்தி, உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

5ஜி தொழில்நுட்பத்தை ஜியோ நிறுவனம் பெரிய அளவில் செயல்படுத்தியுள்ளதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. தற்போது ஜியோவின் டேட்டா போக்குவரத்தில் 28 சதவீதம், 5ஜி மூலம் பெறப்படுகிறது.

2023-24இல், ஜியோவின், வரிகளுக்கு முந்தைய லாபத்தின் அளவு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்