மே மாதத்தில் உச்சம் தொட்ட கிரெடிட் கார்டு கடன்கள்! எவ்வளவு தெரியுமா?

Update: 2022-06-28 13:43 GMT

2022 மே மாதத்தில் நாடு முழுவதும்17 லட்சம் கடன் அட்டைகளை, வங்கிகள் வழங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.


2022 ஏப்ரலில் நாடு முழுவதும் மொத்தம் 7.51 கடன் அட்டைகள் புழகத்தில் இருந்தன. மே மாத இறுதியில் இது 2.2 சதவீதம் அதிகரித்து, 7.68 கோடியாக

அதிகரித்துள்ளது.


2021 மே மாதத்தை ஒப்பிடுகையில், 2022 மே மாதத்தில் கடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 23.3 சதவீதம் அதிகரித்துள்ளது.


கடன் அட்டைகள் மூலம் செலவிடப்பட்ட மொத்த தொகையின் அளவு, ஏப்ரலில் 1.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்து, மே மாதத்தில் 1.13 லட்சம் கோடி ரூபாயாக, 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.


கடன் அட்டை ஒன்றிற்கான மாதாந்திர பயன்பாட்டின் அளவு, மே மாதத்தில் 14 ஆயிரத்து 800 ரூபாயாக, 5 சதவீதம் அதிகரித்துள்ளது.


கடன் அட்டைகள் மூலம் வாங்கப்பட்ட கடன்களின் மொத்த அளவு, இதுவரை இல்லாத அளவுக்கு மே மாதத்தில் 1.54 லட்சம் கோடி ரூபாயாக உச்சமடைந்துள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்