வனத்துறை ரோந்து பணிக்காக புதிய பைக் - கர்நாடகா என்.ஐ.டி. மாணவர்கள் அசத்தல்

வனத்துறை ரோந்து பணிக்காக பல்வேறு வசதிகளுடன் ஈ-பைக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-21 07:40 GMT
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள என்.ஐ.டி. மாணவர்கள், வனத்துறை ரோந்து செல்ல ஏதுவாக புதுவகை பைக்கை உருவாக்கியுள்ளனர். முழுக்க முழுக்க மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் அந்த வண்டியில், வாக்கி டாக்கி மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளது. மேலும், முகப்பு விளக்கை கையில் எடுத்து, பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இன்றி, நவீன வசதிகளுடன் பயணிக்கும் வசதியுடன் உருவாக்கியுள்ள பைக்கின் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய்., வித்யுக் 4.0 மாடல் பைக் பலரையும் கவர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்