குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை - மேலாளர் கொலை வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

தேரா சச்சா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-10-18 13:52 GMT
தேரா சச்சா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

த மெசஞ்சர் ஆஃப் காட் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், தேரா சச்சா அமைப்பின் தலைவராகவும் உள்ளவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர் மீது ஏற்கனவே பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனிடையே இவரின் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் என்பவர் கடந்த 2002ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குர்மீத் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குர்மீத் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்