கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழை: மேகவெடிப்பு காரணமில்லை என விளக்கம்

கேரளாவில் கனமழை கொட்டித்தீர்த்து அழிவை ஏற்படுத்தியதற்கு மேக வெடிப்பு காரணமில்லை என்று தேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-18 06:17 GMT
கேரளாவில் பெய்த கனமழையால் இடுக்கி மற்றும் கோட்டயம் பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டதில் பலர் பாதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய மகாபத்ரா, கனமழை கொட்டித்தீர்த்ததற்கு மேக வெடிப்பு காரணம் இல்லை என்றார். 

அரசுப்பிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும், மேற்கில் இருந்து வீசிய பலத்த காற்றும் அதிக மழைக்கு காரணம என்றார். 

வரும் நாட்களில் மழையின் தீவிரம் குறையும் என்ற அவர், 20 மற்றும் 21ம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். 

கடலோர மற்றும் மலைப்பகுதிகளை அதிகம் கொண்ட கேரளாவில் மழைக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அவர், 

நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.  

வானிலை ஆய்வு மையம் மழை தொடர்பான தகவல்களை இந்திய புவியியல் ஆய்வு மையத்திற்கு, வழங்குவதாகவும் தெரிவித்தார். 

மேலும், கேரளாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பதிவாகும் கனமழைக்கும் பருவநிலை மாற்றமே காரணம் என அவர் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்