உத்தரபிரதேச வன்முறை - விசாரணை ஆணையம்

உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-10-07 09:44 GMT
உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய பேரணியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் மேலும் 4 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுக்க தொடங்கியது.

இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தாவா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு 2 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்படுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்