கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 12 வயது சிறுவன் உயிரிழப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-05 06:18 GMT
கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.  கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், தற்பொழுது மீண்டும் தலைத்தூக்கியுள்ள நிபா வைரஸ் பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3ம் தேதி கோழிக்கோட்டில் 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் அறிகுறி இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுவனின் மாதிரிகளை சோதனையிட்ட புனே ஆராய்ச்சி நிறுவனம் நிபா வைரஸ் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியது. தொடர்ந்து சிறுவனுக்கு கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை உயிர் பிரிந்தது. இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்திய நிலையில், மத்திய நோய்க்கட்டுப்பாட்டு குழு கோழிக்கோட்டிற்கு விரைந்துள்ளது. வௌவ்வால் மூலம் மனிதர்களுக்கு பரவும் நிபா வைரஸ் 2018ம் ஆண்டு கோழிக்கோட்டில் பரவி அதிகளவில் பாதிப்பை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 






Tags:    

மேலும் செய்திகள்