"கர்நாடகாவில் முழு ஊரடங்கு தொடங்கியது" - வாகன சோதனையில் தீவிரம் காட்டாத கர்நாடகா போலீஸ்

கர்நாடகா மாநிலத்தில் நேற்று இரவு முதல், முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், முதல் நாளில், எல்லையில், போலீசார் எந்த கெடுபிடியும் காட்டாததால், வாகனங்கள் சீறிப்பாய்ந்து சென்றனர்.

Update: 2021-04-28 03:30 GMT
கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த கர்நாடகா அரசு, நேற்று இரவு 9 மணி முதல் அடுத்த மாதம் 10 தேதி வரை என 14 நாள்கள் முழுஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. தினந்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறிகள், மளிகை உள்ளிட்ட  அத்திவாசிய தேவைகள் உள்ள கடைகள் திறக்கப்படும், பொது போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  நேற்று இரவு 9 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால், தமிழகத்திலிருந்து கர்நாடகா நோக்கி சென்ற கார்களில், பொதுமக்கள் அதிவேகமாக பயணித்தினர். மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் கர்நாடகா மாநில போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் எந்த வாகன சோதனையும் செய்யவில்லை. 


Tags:    

மேலும் செய்திகள்