"தரத்தில் முத்திரை பதிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

எல்லாவற்றிலும் அரசின் தலையீடு என்பது தீர்வுக்கு பதிலாக பிரச்சினைகளையே மேலும் உருவாக்கும் என பிரதமர் மோடி கூறினார்.

Update: 2021-03-05 12:05 GMT
மத்திய பட்ஜெட்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை தொடர்பான ஒதுக்கீட்டை சிறப்பாக அமல்படுத்துவது குறித்த கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார். தொழில்துறை நடைமுறைகள் எளிமையாக்க அரசு தொடர்ச்சியாக சீர்திருத்தங்களை கொண்டுவருகிறது என்ற அவர், எல்லாவற்றிலும் அரசின் தலையீடு என்பது தீர்வுக்கு பதிலாக பிரச்சினைகளையே மேலும் உருவாக்கும் என்று கூறினார்.எனவேதான் அரசு சுய ஒழுங்குமுறை சுயசான்று போன்றவற்றை அரசு தீவிரமாக வலியுறுத்தி வருகிறது  எனவும் குறிப்பிட்டார். இந்தியாவில் உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்திலே உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது எனக் கூறிய அவர் இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மொத்த உற்பத்தியில் 5 சதவீதத்தை ஊக்கத்தொகையாக அரசு வழங்குகிறது என்றும் குறிப்பிட்டார்.நம்முடைய பொருட்கள் விலை, தரம் போன்றவற்றில் சர்வதேச சந்தையில் முத்திரை பதிக்க வேண்டும் எனக் கூறிய பிரதமர் மோடி,இதனை சாத்தியமாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்