நீண்ட இடைவெளிக்கு பின் வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி விரைவில், அரசுமுறை பயணமாக, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2021-03-04 02:52 GMT
கொரோனா பெருந்தொற்று பரவல், முழு ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல் கட்டமாக  மார்ச் 25 ம் தேதி பிரதமர் வங்க தேசம் செல்வார் என்றும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் அவர் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமரின் வருகைக்கு முன்னதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை டாக்கா செல்கிறார். இதனையடுத்து, மே மாதம், இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு மாநாட்டில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி போர்சுகலுக்கு, செல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் இங்கிலாந்தின் கார்ன்வால் நகரில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்