"பாஜக - காங்கிரஸ் வேறுபாடு குறைவு" : கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்

பாஜகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான வேறுபாடு மிகவும் குறைவு என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

Update: 2021-02-17 04:11 GMT
பாஜகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான வேறுபாடு மிகவும் குறைவு என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. திக் விஜய சிங் நன்கொடை அளித்ததை சுட்டிக்காட்டி பேசியுள்ள அவர், கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏவும் நன்கொடை வழங்கியுள்ளதாகவும், இதுபோன்ற செயல்பாடுகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஏற்றுக்கொள்வதற்கு சமம் என்பதை காங்கிரஸ் உணர வேண்டும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்