உறவினர்கள் மத்தியில் அரசியல் முன்விரோதம் - இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்

தெலங்கானா மாநிலத்தில் அரசியல் முன்விரோதம் காரணமாக உறவினர்கள் மத்தியில் வெடித்த மோதல், துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது.

Update: 2020-12-19 12:17 GMT
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில், எம்.ஐ.எம். கட்சியின் மாவட்ட தலைவராக இருப்பவர் ஃபாரூக் அகமது. ததிகுடா பகுதியைச் சேர்ந்த இவரும், இவரது உறவினர்களும் பல ஆண்டுகளாக, எம்.ஐ.எம். கட்சியின் இணைந்து செயல்பட்டு வந்தனர். 

ஃபாரூக் அகமதுவின் உறவினர் குடும்பத்தினர், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தனர். இதனால், ஏற்பட்ட விரோதம், பலமுறை மோதல்களாக மாறியது. 

இந்த நிலையில்தான், நேற்று மாலை உறவினரின் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடியபோது, ஃபாரூக் அகமது தகராறு செய்துள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து, கைகலப்பானது. 

அப்போது, ஒரு கையில் வாளும், மறு கையில் கத்தியும் கொண்டு, எதிர்த்தரப்பை ஃபாரூக் தாக்கத் தொடங்கியதும், அங்கே பரபரப்பு மூண்டது. துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்ட அதிர்ச்சி மீள்வதற்குள், அடுத்தடுத்து மூன்று பேர் சுருண்டு விழுந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்