மிரட்டும் பாலியல் வழக்கு.. மோகன் லாலின் திடீர் முடிவு.. பரபரப்பில் கேரளம் | Mohallal | Kerala

Update: 2024-05-25 15:32 GMT

மலையாள நடிகர் சங்க பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய, நடிகர் மோகன்லால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், மலையாள நடிகர் சங்க தலைவராக மோகன் லாலும், செயலாளராக எடவேல பாபுவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப் விவகாரத்தில், மோகன்லாலின் நடவடிக்கைகளுக்கு கண்டனங்கள் எழுந்தன. தொடர்ந்து எதிர்ப்பு குரல்கள் எழுவதால், மலையாள நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலக, மோகன்லால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் 25 ஆண்டுகளாக நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் எடவேல பாபுவும் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்