மத்தியபிரதேச இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?

மத்தியபிரதேசத்தில், பாஜக ஆட்சி நீடிக்குமா, இழந்த ஆட்சியை காங்கிரஸ் மீட்குமா என்ற எதிர்பார்ப்பில், 28 தொகுதிகளின் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

Update: 2020-11-10 04:55 GMT
230 சட்டசபை தொகுதிகள் கொண்ட மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்ற நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார். அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், ஏற்கனவே காலியாக இருந்த 5 தொகுதியில் சேர்த்து 28 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. இன்னும் 9 தொகுதிகளில் வென்றால் போதும் என்ற நிலையில், 88 எம்.எல்.ஏ.க்களை கைவசம் வைத்துள்ள காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் பெற 28 தொகுதிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 21 தொகுதிகளில் வென்றால்கூட பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க வேண்டிய சூழலில் உள்ளது. பீகார் தேர்தலை போல், மத்தியபிரதேச வாக்கு எண்ணிக்கையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்