மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு : சென்செக்ஸ் 38 ஆயிரம் புள்ளிகளுக்கு சரிந்தது

இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று காலை, வர்த்தக தொடக்கத்தில் இருந்தே சரியத் தொடங்கியது.

Update: 2020-02-28 07:47 GMT
இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று காலை, வர்த்தக தொடக்கத்தில் இருந்தே சரியத் தொடங்கியது. காலை 11 மணி அளவிலான வர்த்தகத்தில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 340 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 11 ஆயிரத்து 300 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. வங்கித்துறை , மிட்கேப் பங்கு வர்த்தகத்தில் அதிக சரிவு காணப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்கள் 5 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளனர். உலக அளவில் முக்கிய பங்குச் சந்தைகள் அனைத்தும் சரிந்துள்ளதால், அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்