அரசு குடியிருப்பை காலி செய்யும் விவகாரம் : மத்திய அரசின் கெடுவுக்கு காங்கிரஸ் கண்டனம்

முன்னாள் எம்.பிக்கள் அரசு குடியிருப்பை ஒரு வாரத்துக்குள் காலி செய்ய வேண்டுமென மத்திய அரசு கெடு விதித்திருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2019-08-20 07:52 GMT
புதிய எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையிலும், முன்னாள் எம்.பிக்கள் 200 பேர் இன்னும் அரசு குடியிருப்பை காலி செய்யாமல் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் புதிததாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களுக்கு அரசு குடியிருப்பை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்குள் அரசு குடியிருப்பை காலி செய்ய வில்லை என்றால் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்படும் என மக்களவை வீட்டுவசதி கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆனந்த் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் எம்.பிக்களுக்கு அலுவலக உதவியாளர்களைவிட மிக மோசமான ஓய்வூதியம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்னும் ஒரு சில துறையின் செயலாளர்கள், கடந்த ஆறு மாதமாக அரசின் சலுகையை அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்