60 அடியில் பிரமாண்ட என்.டி.ஆர் சிலை

ஆந்திர தலைநகர் அமராவதியில், முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமாராவுக்கு, 406 கோடி ரூபாய் செலவில் 60 அடி உயர சிலை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2018-12-17 07:21 GMT
தமிழகத்தில் எம்ஜிஆரைப் போல், ஆந்திராவில் புகழ் பெற்ற முதலமைச்சராக திகழ்ந்தவர் என்.டி.ராமராவ். அவரது மருமகனும், தற்போதைய முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, என்.டி.ஆருக்கு சிலை அமைக்கப்படும் என கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்தார். அதற்கான பணிகளை தற்போது, ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. 406 கோடி ரூபாய் மதிப்பில் 60 அடி உயரத்தில் என்.டி.ஆருக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்பட உள்ளது.  என்.டி.ஆர் நினைவு மண்டபம் மட்டுமின்றி வணிக வளாகம், சுற்றுலா தளம் அமைக்கவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பணிகளுக்காக 200 ஏக்கர் நிலத்தை கையப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிதி திரட்டும் பணி தற்போது தொடங்கியது. 
Tags:    

மேலும் செய்திகள்