மோடி அரசின் சாதனை விளக்க புகைப்பட காட்சி..!
பதிவு: செப்டம்பர் 01, 2018, 07:03 PM
சென்னை , கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், பிரதமர் மோடி ஆட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். மேலும், மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் கைத்தறி ஆடைகள், கைவினை பொருட்கள், விதை அங்காடி போன்ற 10க்கும் மேற்பட்ட கடைகளையும், ஆளுநர் திறந்து வைத்து பார்வையிட்டார்.