பிரதமர் மோடி - தென்கொரிய அதிபர் சந்திப்பு
பதிவு: ஜூலை 09, 2018, 06:57 PM
அரசு முறைப் பயணமாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் டெல்லிக்கு வந்துள்ளார்.. பிரதமர் மோடியை சந்தித்த அவர், டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நொய்டாவில் உள்ள செல்போன் தொழிற்சாலைக்கு செல்வதற்காக இருவரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இந்த சந்திப்பின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.