கெத்து காட்ட நினைத்து Bulb வாங்கிய - ஆர்வக்"கோளாறு" தொண்டர்கள் - ஒரே நொடியில் தலைகுப்புற மாறிய சீன்

Update: 2024-04-26 10:16 GMT

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வேட்புமனுத் தாக்கலுக்குச் சென்ற தொண்டர்கள் சிலர் டிராக்டரில் சாகசம் செய்த போது, டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் படுகாயம் அடைந்தனர். சிங்கன்னமல தொகுதி தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சிராவனிக்கு ஆதரவாக சென்ற தொண்டர்களில் சிலர் ஆர்வக்கோளாறில் டிராக்டரை சுற்றிச் சுற்றி ஓட்டி தங்கள் வீர தீர பராக்கிரமத்தைக் காட்ட முயல... அவர்கள் செய்த அலும்பில் தலை சுற்றித் தலைகுப்புறக் கவிழ்ந்தது டிராக்டர்... இதில் டிராக்டரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்