"மாணவர்களை சேர்க்கைவில்லை என்றால் டிரான்ஸ்பர் தான்" - தொடக்க கல்வித்துறை அதிரடி

Update: 2024-04-26 10:09 GMT

போதிய அளவு மாணவர் சேர்க்கை இல்லாத அரசுப்பள்ளிகளின் உபரி ஆசிரியர்கள், காலிப்பணியிடங்கள் உள்ள வேறு அரசுப்பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவர் என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி, போதிய அளவு மாணவர் சேர்க்கை இல்லாததால் அரசு தொடக்க பள்ளிகளில் 2 ஆயிரத்து 236 இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதிக்குள், மாணவர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவேண்டும் என தொடக்க கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு சேர்க்கப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள், ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்