Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.01.2026) | 6 PM Headlines | ThanthiTV

Update: 2026-01-23 13:00 GMT
  • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், பிரதமர் மோடி தலைமையில் NDA கூட்டணி பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது... பொதுகூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது...
  • பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் NDA கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.. ஈபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பிரதமருடன் ஒன்றாக அமர்ந்திருந்தனர்..
  • பிரதமர் மோடிக்கு சால்வை மற்றும் ஏலக்காய் மாலை அணிவித்து ஈபிஎஸ் வரவேற்றார்.. திருப்பரங்குன்றம் முருகன் படத்தை நினைவுப்பரிசாக வழங்கினார்...
  • தமிழ்நாடு மாற்றத்திற்கு தயாராகிறது என்பதை இந்த மாபெரும் கூட்டம் உணர்த்துகிறது.. திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கி விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்...
  • மரியாதைக்குரிய சகோதரர் என்று டிடிவி தினகரனை வரவேற்று பேசிய ஈபிஎஸ்... பிரதமர் மோடி துணை நிற்கிறார்.. NDA கூட்டணி வலுவான கூட்டணி என்றும் தெரிவித்தார்...
  • பிரதமர் மோடி சென்னை வந்துள்ள நிலையில் சூரியன் மறைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்... மதுராந்தகம் கூட்டத்தால் சட்டமன்றத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்..
Tags:    

மேலும் செய்திகள்